Thursday 2nd of May 2024 10:48:15 PM GMT

LANGUAGE - TAMIL
-
தமது கிராமத்து காணியை தனிநபர் உரிமைகோருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!

தமது கிராமத்து காணியை தனிநபர் உரிமைகோருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!


வவுனியா மாணிக்கர் இலுப்பைக்குளம் பகுதியில் உபகுடும்பங்களுக்கு சேரவேண்டிய 20 ஏக்கருக்கும் மேற்பட்ட காணியினை மன்னாரை சேர்ந்த நபர் ஒருவர் உரிமை கோருவதாக மாணிக்கர் இலுப்பைக்குளம் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

குறித்த பிரச்சனையை முன்னிறுத்தி கிராம மக்களால் இன்றையதினம் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ஆர்பாட்டத்தில் கருத்து தெரிவித்த பொதுமக்கள்...

மன்னாரை சேர்ந்த நபர் ஒருவர் எமது பகுதியில் வந்து20 ஏக்கர் காணியை குத்ததைக்கு எடுத்துசெய்துவந்தார். தற்போது கிராமத்தில் உள்ள பொதுக்காணியினை காணியற்ற உபகுடும்பங்கள் துப்புரவு செய்து வேலிஅடைத்திருந்த நிலையில், அதை அதனது காணிஎன்றும் அதற்கான பத்திரம் தன்னிடம் இருப்பதாகவும் அவர் எங்களை அச்சுறுத்துகின்றார்.

இது தொடர்பாக பொலிசாரிடம் முறையிட்டு பொலிசாருடன் வந்து எம்மை அச்சுறுத்தியதுடன், காணியின் வேலியினையும் பிடுங்கி எறிந்ந்துள்ளார்.

எமது மக்களுக்கு சேரவேண்டிய காணியினை வெளியிடத்தை சேர்ந்த ஒருவர் உரிமைகோருவதுடன், எம்மை அச்சுறுத்துவதனை எம்மால் ஏற்கமுடியாது. எனவே எமக்கு உரிய தீர்வினை தரவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

குறித்த பகுதிக்குசென்ற பாராளுமன்ற உறுப்பினர் திலீபன் இவ்விடயம் தொடர்பாக நாளையதினம் பிரதேச செயலாளருடன் கலந்துரையாடிவிட்டு தீர்வினை வழங்குவதாக தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்துசென்றனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE